Breaking News

உடல் எடையை குறைக்கனுமா இதச்சாப்பிடுங்க !!

வாரத்தில் ஒருநாள் கொள்ளு சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில் சேர்ப்பது நல்லது. இன்று கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
கொள்ளு - 250 கிராம்
வெந்தயம் - 25 கிராம்

செய்முறை :

* அரிசி, உளுந்து, வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

* கொள்ளுவை கல் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கிரைண்டரில் அரிசியை தனியாகவும், கொள்ளுவை தனியாகவும் அரைத்து பின் ஒன்றாக கலந்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்க வேன்டும். சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் அதே முறைதான்.

* புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான கொள்ளு இட்லி ரெடி.

* புதினா சட்னியுடன் சாப்பிட கொள்ளு இட்லி சூப்பராக இருக்கும்.