Breaking News

மட்டக்களப்பு கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

மட்டக்களப்பு கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி  காலை 07.00 மணிக்கு  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது .


மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற  இருதயபுரம்  கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி   இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்தன்  ,அருட்தந்தை   ஜெரோம் டி லிமா  , அருட்தந்தை  மொறாயஸ் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .

ஆலய  வருடாந்த திருவிழா பங்குதந்தை  லெஸ்லி ஜெயகாந்த்  தலைமையில்  20.01.2017  வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  

ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும்மறைவுரைகளும் பிராத்தனைகளுடன்  திருப்பலிகளும்  இடம்பெற்றது .

(28) சனிக்கிழமை மாலை  புனிதரின் திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடுகளும் மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .
(29) ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை   லெஸ்லி ஜெயகாந்தன்  ,அருட்தந்தை   ஜெரோம் டி லிமா  , அருட்தந்தை  மொறாயஸ் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். 

திருப்பலியை தொடர்ந்து புனிதரின்   திருச்சுருவ  பவணியும்  அதனை தொடர்ந்து  ஆலய  முன்றலில்  திருநாள்  கொடியிறக்கத்துடன்   புனிதரின் ஆசீர்வாதத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .

திருப்பலியின் பின்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பங்கு மாணவர்களை ஆயரினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் திருவிழா திருப்பலியில்  பெருமளவான மக்கள் கலந்துகொண்டு  திருவிழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது  


இதேவேளை இந்த திருவிழா திருப்பலியில்  கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா கலந்து கொண்டு  சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது . (லியோன்)