Breaking News

உலகை திரும்பி பார்க்க வைத்த கநேடிய பிரதமரின் மனித நேயம் !!

அமெரிக்கா விரட்டிய அகதிகளை நாங்கள் அரவணைப்போம் என கனடா பிரதமர் சொல்லியிருப்பது உலகம் முழுவதும் அவரது புகழை அதிகரிக்கச் செய்துவிட்டது. அதே நேரம் அமெரிக்காவை அவர் விமர்சிக்கவில்லை. ஆனாலும் டொனால்டு டிரம்பிற்கு எதிரான அவரது நடவடிக்கை துணிச்சலுக்கு இலக்கணம். காரணம் கனடாவில் இருந்து தான் அமெரிக்காவிற்கு 75 சதவீத பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

அப்படி இருந்தும் அகதிகளின் துயரங்களை துடைக்க அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரை மாவீரனாக உயர்த்தியுள்ளது. இதற்கு கனடா மக்கள் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு Aylan Kurdi என்ற 3 வயது சிரியா நாட்டின் சிறுவன் துருக்கி கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்ட நிகழ்வு உலகத்தையே உலுக்கியது. அந்தச் சிறுவனின் உறவினர்கள் கனடாவில் இருந்தனர். இந்தச் சம்பவம் அந்த ஆண்டு நடைபெற்ற கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து அகதிகள் மீது கனடா மக்களின் கருணை முன்பைவிட அதிகரித்தது