Breaking News

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிறந்ததின கொண்டாட்டங்கள் பொலன்னறுவையில் சமூகசேவை நிகழ்வுகளுடன்.

இலங்கையின் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தன்னுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடிப்படை உணவு பொருட்கள் வழங்கும் சமூகசேவை நிகழ்வில் கலந்துகொண்டார். பொலன்னறுவை மிரிஸ்சேன ஆரம்ப பாடசாலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்ககள் எதிர்நோக்கும்  கல்விசார் பிரச்சினைகள் மற்றும் பாடசாலையியில் நிலவும் குறைகள் பற்றி ஜனாதிபதி அவர்கள் விசாரித்து அறிந்து கொள்வதற்கும் மறக்கவில்லை

அதனை தொடர்ந்து மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் சிறுநீரக நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 24000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மகா சங்கத்தினரின் பிரித் ஒலியுடன் நீர் சுத்திகரிப்பு மையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை மகா சங்கத்தினர்  பூஜை செய்யும் நிகழ்வும் கௌரவ ஜனாதிபதிக்கு நல் ஆசிவேண்டி  இறை வழிபாடுகளும் இடம்பெற்றது.

கடந்த 1951 ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி கம்பஹா யோகடவில் பிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 64 வது பிறந்த தினத்தினை கொண்டாடினார்.

இவர் 1967 ம் ஆண்டு பொலநறுவை மாவட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் லீக் ல் சேர்ந்தார். 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி நடைபெற்ற ஜனாதிப தேர்தலில் மஹிந்தராஜபக்சவை எதிர்த்து நின்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனநாயகத்தினை ஏற்படுத்துவும், சர்வ இன மக்களும் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வழியமைக்கக் கூடிய ஆட்சியினை முன்னெடுத்து வருவதில் இது வரையில் இவர் வெற்றி கண்டுள்ளதாக அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.