Breaking News

விஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைககள் நிறுத்தப்பட்டமையால் பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியங்கள்.

மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுரம் பன்சாலை குறுக்கு வீதி திருத்தவேலைகளக்கான பொருள் இறக்கப்பட்டு ஒரு மாதத்தினை கடந்துள்ள போதிலும் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

விஜயபுரத்தில் பன்சாலை வீதியில் இருந்து பன்சாலை குறுக்கு வீதியூடாக கூழாவடி புகையிரத கடவை பக்கமாக செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களால் பாவிக்கப்பட்டுவரும் வீதியாகும். இவ் வீதி மிகவும் மோசமானநிலையில் காணப்பட்டநிலையில் இவ் வீதியை 15000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் 100 நாள்; வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொதுமக்களால் இவ் வீதி செப்பனிடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டத்தில் கொங்கிறீட் இடும் பணிக்காக ஆரம்பக்கட்டமாக  கல் மண் ஒரு மாதங்களுக்கு முன்பு வீதியின் நடுவில் கொட்டப்பட்டன ஆனால் இதுவரை இவ் வீதி செப்பனிடப்படாமல்(கொங்கிறீட் இடபடாமல்) இருப்பதால் அவ் வீதியால் தினமும் பயணம் செய்யும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் கஸ்டத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும் இவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பிறிதொரு இடத்தில் நிறுத்திவிட்டே தங்களது வீடுகளுகளுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரிடம் கேட்டபோது, குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். தேர்தலையொட்டி அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்துமாறு கோரப்பட்டதன் அடிப்படையில் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )