ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்குறான்.. பிரேம்ஜி கவலை
ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்குறான்.. பிரேம்ஜி கவலை
தான் பார்ட்டிகளுக்கு செல்லும் விஷயம் பற்றி மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் தனக்கு யாரும் பெண் தர மறுப்பதாக நடிகர் பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார். பிரேம்ஜி அமரன் தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாங்கா படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். மாங்கா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. படத்தில் அவருக்கு அத்வைதா, லீமா என இரண்டு ஜோடிகள். இந்நிலையில் இது குறித்து பிரேம்ஜி கூறுகையில்,
நான் சோலோ ஹீரோவாக பல காலம் ஆகிவிட்டது. என்னை ஹீரோவாக வைத்து என் அண்ணன் ஒரு படத்தை எடுக்க உள்ளார். அவர் இல்லாமல் நான் இல்லை. நான் பார்ட்டிகளுக்கு செல்வது பற்றி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. அதை எல்லாம் பார்த்துவிட்டு எனக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். எனக்கு திருமணம் செய்து வைக்க என் அண்ணன் தான் தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.