கொல்லப்பட்ட சிறுத்தைக்காக சன்மானம்
யால தேசிய வனாந்தரத்தில் முதலாம் இலக்க வலயத்தில் வைத்து ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியன்று பலியாகியிருந்த சிறுத்தை தொடர்பில் தகவல்களை தருவோருக்கு 25ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அகில இலங்கை வனஜீவராசிகள் ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ.டப்ளியூ. பீரிஸ் அறிவித்துள்ளார். இந்த வனாந்தரத்தில் ஜீப் பயணிக்கும் வீதியில் வைத்தே ஜீப் வண்டியில் அகப்பட்டு இந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் ஒரு குழுவொன்று வனாந்தரத்துக்கு வருகைதந்துள்ளது. இந்த சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரியுமாயின் அவைதொடர்பில் அறிவிக்குமாறு அச்சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். தலைவர் 0716868303 செயலாளர் 0718114492 பொருளாளர் 0714227223 தகவல் வழங்குவோரின் இரகசியம் பேணப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.