Breaking News

ஸ்ருதி ஹாஸனின் 'நண்பிடா' யார் தெரியுமா?

ஸ்ருதி ஹாஸனும், நடிகை பூஜா குமாரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம். ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அவர் ஜான் ஆபிரகாம் ஜோடியாக நடித்துள்ள வெல்கம் பேக் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. ஸ்ருதி யாருடனாவது பழகினால் மிக விரைவிலேயே அந்த நபரின் நெருங்கிய தோழியாகிவிடுவாராம். இந்நிலையில் தனது தந்தை உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள பூஜா குமாரின் நெருங்கிய தோழியாகிவிட்டாராம் ஸ்ருதி. மும்பை சென்றால் பூஜா ஸ்ருதியின் வீட்டில் தான் தங்குகிறாராம். இருவரும் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்களாம், ஷாப்பிங் செய்கிறார்களாம். சென்னை, மும்பையில் அவர்களை ஒன்றாக காண முடிகிறதாம். ஸ்ருதி அஜீத்துடன் சேர்ந்து தல 56 படத்தில் நடித்துள்ளார். கால்ஷீட்டை சொதப்பி படப்பிடிப்பை தான் தாமதப்படுத்தியதாக வந்த செய்தியை ஸ்ருதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.