தேர்தலில் மவுனம் காக்கும் விஜய், அஜீத் இறுதில் ஜெயிக்போவது சரத்குமாரா ? விஷாலா ?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடத்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி தேர்தல் தினத்தை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது சங்க தலைவர் பதவி வகிக்கும் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால், நாசர் தலைமையிலான அணியும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ப உறுப்பினர்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகின்றன.
ரஜினி, கமலை சந்தித்து இருதரப்பும் ஆதரவு கோரி வருகிறது. ஆனால் விஜய், அஜீத் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வருகின்றனர். விஷால் தரப்பு இருவரையும் சந்தித்து பேச அனுமதி கேட்டிருந்தது. விஜய் நேரம் ஒதுக்கி தந்தபோது அணியினர் வேறு பிரச்னை காரணமாக சந்திக்கவில்லை. அஜீத்திடம் அனுமதி கேட்டபோது தேர்தல் சம்பந்தமாக யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம்.
இந்நிலையில் சரத்குமார் அணி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிம்பு தெரிவித்திருக்கிறார். அதேபோல் எஸ்.ஜே.சூர்யாவும் இதே அணி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனகில்லை என்று கூறி இருக்கும் அவர் அந்த அணிக்கு ஆதரவு தருவதாகவும் விஷால் அணிக்கு எதிராக தான் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.