கட்டாரில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம் புதிய முறையால் சிக்கல்கள் நிவர்த்தி.
டோஹா கட்டாரில் பணிபுரியும் சகல இலங்கை பணியாளர்களின் சம்பளம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வங்கி கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டு தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அப்துல்லா சாலியா அல் குலாபி வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் வெளிநாட்டு தொழில் அமைச்சர் தலதா அதுகோரல மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டர் இதன்போது அவர் டோகா கட்டாரின் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சரையும் சந்தித்தார்.
டோகா கட்டாரில் உள்ள இலங்கை பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் கைகளில் வழங்குவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இந்த புதிய முறையின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என அந்த நாட்டு தொழிலமைச்சர் குறிப்பிட்டுள்ளர். கட்டார் ராஜ்சியத்தில் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.



