அரச திணைக்களங்களில் நிரந்தர நியமனங்களில் உள்வாங்க கோரி வேலையற்ற பட்டதாரிகளின் கவனயிர்ப்பு போராட்டம்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் .
அரச திணைக்களங்களில் நிரந்தர நியமனங்களில் உள்வாங்க கோரி இந்த கவனயிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் .
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்படாதவர்கள் மற்றும் இதுவரையில் நியமனம் வழங்கப்படாதவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனங்களை வழங்க அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என இந்த கவனயிர்ப்பு போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
பட்டங்களை பெற்ற நிலையில் தொழில்பெறும் வயதை கடந்த செல்லும் நிலையிலும் அவர்களுக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாத நிலையே இருந்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதுள்ள புதிய நல்லாட்சியில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ,பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )


