மட்டக்களப்பு- குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கற்கும் மாணவியொருவர் குழவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்
புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும் வேளையில் வீதியில் வைத்து கருங்குழவிகள் கொட்டியுள்ளன.
காயங்களுக்குள்ளாகி மயக்கமடைந்த மாணவி உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை காலை மரணத்தைத் தழுவியுள்ளார்.



