பாராளுமன்ற உறுப்பினர்களாக மூவர் சத்தியப் பிரமாணம்.
எம்.ஐ.அப்துல் நஸார்
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் லகஷ்மன் செனவிரத்ன, பாலித தேவபெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்று (22) பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பாராளுமன்றத்திற்கு தெரிவான சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருப்பத் தேர்வின் அடிப்படையில் அடுத்த நிலையிலுள்ள லகஷ்மன் செனவிரத்ன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நிமிக்கப்பட்டு இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தனது பதவியினை இராஜினாமா செய்த சரத் மாயாதுன்னையின் இடத்திற்கு பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தார்.
களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக பாலித தேவபெரும தனது மகனின் மரணம் காரணமாக தாமதமாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.



