Breaking News

மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் 06வது பாடுமீன்கள் கிரிக்கட் சமரில் வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை வெற்றிபெற்றது - படங்கள் இணைப்பு

மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரிக்கும் வின்சன்ட்  மகளீர் தேசிய பாடசாலைக்கும் இடையிலான  06வது  பாடுமீன்கள் கிரிக்கட் சமரில்  வின்சன்ட் மகளீர் தேசிய  பாடசாலை  வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இன்று காலை ஆரம்பமான கிரிக்கட் சமரில் முதலில் துடுப்பெடுத்தாடியது  புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி  20 ஒவர்களில் முடிவில்  07விக்கட்டுகளை  இழந்து  118 ஓட்டங்களை   பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வின்சன்ட்  மகளீர் தேசிய  பாடசாலை  அணி மிகவும் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி வந்த நிலையில்  மழை குறுக்கிட்டதனால்  17,05  ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டது .


இந்த நிலையில் இது தொடர்பான முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் நடுவர்களிடமே நிலைமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் டவேக் லுயிஸ் முறையில்  வின்சட் மகளீர் தேசிய பாடசாலை வெற்றி  பெறப்பட்டதாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியின் வெற்றி வின்சட் மகளீர் தேசிய பாடசாலை  வசம் சென்றது.


இதன்போது இன்றைய சமரின் சிறந்த துடுப்பாட்டக்காரராக   புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மயூரி சண்முகலிங்கமும் ,சிறப்பாட்டக்காரராக   வின்சட் மகளீர் பாடசாலை யதுஷாணி பத்மநாதனும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)