Breaking News

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடப் பயிற்சி நெறி


எம்.ஐ.அப்துல் நஸார்

புற நெகும செயற்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடப் பயிற்சி நெறி கடந்த 01ஆம் மற்றும் 02ஆந் திகதிகளில் திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது. 

உள்ளூராட்சிமன்ற உள்ளகக் கணக்காய்வாளர்களின் வகிபாகம் என்ற பாடத் தலைப்பில் இப் பயிற்சி நெறி நடைபெற்றது. 

இப் பயிற்சி நெறியில் உள்ளூராட்சிமன்றங்களில் கடமையாற்றும் செயலாளர்கள்இ உள்ளூராட்சி உதவியாளர்கள்இ நிதி உதவியாளர்கள்இ   ஆகியோர் பங்குபற்றினர். 

முதல் நாள் பயிற்சி நெறியில் வளவாளர்களாக சிரேஷ;ட ஆய்வு உத்தியோகத்தர்களான என்.ஐங்கரன் மற்றும் எஸ்.சர்வேஸ்வரன் ஆகியோரும்இ இரண்டாம் நாள் பயிற்சி நெறியில் வளவாளராக ஓய்வு பெற்ற உதவிக் கணக்காளர் நாயகம் ரி.பாலசுப்பிரமணியமும் கடமையாற்றினர்.  

இந்தப் பயிற்சி நெறியில் திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அமபாறை மாவட்டங்களிலுள்ள மாநகரஇ நகர மற்றும் பிரதேச சபைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.