சூரியனில் பூமியைப் போல் 50 மடங்கு பெரிதான துளை.
பூமியின் அளவைப் போன்ற 50 மடங்கு பெரிதான துளை ஒன்று சூரியனில் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.
விண்வெளி மற்றும் அதிலுள்ள கோள்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது.
இது சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது. கடந்த 10ம் தேதி இந்த விண்கலமானது எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் சூரியனில் மிகப்பெரிய துளை உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இது சூரியனின் வெளிப் பகுதிக்கும், காந்தப் புலத்திற்கும் நடுவே உள்ளது. 50 மடங்கு பெரியது இந்தத் துளையானது பூமியின் அளவைப் போல 50 மடங்கு பெரிதானது ஆகும். மேலும், இந்தத் துளையிலிருந்து புவியை நோக்கி அதிவேகமாக வெப்பக் காற்று வெளியேறி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.