Breaking News

ஆள் சேர்த்துவிடு, ரூ.6.5 லட்சம் பரிசு பெறு; ஐஎஸ் ஐஎஸ்


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பணப் பரிசு அளிக்கப்படுகிறது. உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ். ஆனால் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளின் சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் ஒரேயடியாக குறைக்கப்பட்டுள்ளதால் பல தீவிரவாதிகள் அந்த அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்
பரிசு 
தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.