அனிருத் பிறந்தநாள் அன்று வேதாளம் ஆடியோ வெளியீடு
படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என மூவருக்கும் ஒரே சிந்தனை இருக்கும் பட்சத்தில் அவர்களின் படைப்பு வெற்றிகரமாக அமையும். அப்படியொரு கூட்டணிதான் ‘வேதாளம்’ படக் கூட்டணி. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் என மூவரும் ஷீரடி சாய்பாபாவின் பக்தர்கள் என்பதால்‘வேதாளம்’ பட சம்பந்தமான எதையும் வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டு வந்தனர். இந்த சென்டிமெண்ட் காரணமாக படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் டீசர் வரை இதனையே கடைபிடித்து வந்தனர். இந்நிலையில் இந்த சென்டிமெண்ட் கொள்கையை படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்காகஇவர்கள் மாற்றியுள்ளனர். அனிருத்தின் பிறந்தநாள் அக். 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே அனிருத்தின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க அன்றைய தினம் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார் அனிருத் என்பது கவனிக்கத்தக்கது. அப்போ அனிருத் பர்த்டே அன்னைக்கு தெறிக்க விடலாமா?



