ரஜினியுடன் நடிக்க பல கோடி கேட்கும் அர்னால்ட்
ரஜினி நடிக்க ‘எந்திரன் 2’ம் பாகம் இயக்க உள்ளார் ஷங்கர். இதில் மற்றொரு ரோபோ மனிதனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னிகரிடம் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் ‘டெர்மினேட்டர்’ ஆங்கில படத்தில் ரோபோவாக நடித்திருக்கிறார். எந்திரன் 2ல் நடிக்க 32 நாள் கால்ஷீட் தர சம்மதித்திருக்கும் அவர் பல கோடி சம்பளம் தர வேண்டும் என்று கேட்பதாக சொல்லப்படுகிறது. மற்றொரு தரப்பு அவர் ரூ.40 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக சொல்கிறது. தனக்கு 50 நாட்கள் கால்ஷீட் தரவேண்டும் என்று அவரிடம் ஷங்கர் கேட்டுள்ளார். விரைவில் இதுபற்றி அர்னால்ட்டை நேரில் சந்தித்து பேச அமெரிக்கா செல்கிறார் ஷங்கர். இவ்வளவு பெரிய சம்பளத்தை அர்னால்டுக்கு தரமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஏற்கனவே இப்படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அர்னால்டுக்கு பல கோடி சம்பளம் என்றால் பட்ஜெட் ரூ.350 கோடி ஆகிவிடும். பெரிய அளவில செலவிடப்பட்டாலும் சர்வதேச அளவில் படத்துக்கு மார்க்கெட் கூடிவிடும் என்பதால் 2 அல்லது 3 மடங்கு வசூல் ஆகும் என்றும் கூறப்படுகிறது.



