Breaking News

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கிராஷ் ஆன 24 முக்கிய இணையதளங்கள்

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கிராஷ் ஆன 24 முக்கிய இணையதளங்கள்

அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ், உபேர், பிபிசி உள்ளிட்ட பல முக்கிய இணையதளங்கள் ஒரே நேரத்தில் கிராஷ் ஆனது. அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ், உபேர், பிபிசி உள்ளிட்ட பல முக்கிய இணையதளங்கள் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் கிராஷ் ஆனது. அதில் பல இணையதளங்கள் கிராஷ் ஆன சிறிது நேரத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

இத்தனை இணையதளங்கள் ஏன் ஒரே நேரத்தில் கிராஷ் ஆகின என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால் சில இணையதளங்கள் கிளவுட் சேவை பாதிப்பால் கிராஷ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இணையதளங்கள் கிராஷ் ஆனதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இது எதேச்சையாக நடந்ததா இல்லை சைபர் தாக்குதலா என்று மக்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள். இது குறித்து நெட்பிளிக்ஸ் செய்தித் தொடர்பாளர் ஜோரிஸ் எவர்ஸ் கூறுகையில், நியூஸ்டார் அளித்து வரும் அல்ட்ரா டிஎன்எஸ் கிளவுட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தான் இணையதளங்கள் கிராஷ் ஆகின. தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் 24 இணையதளங்கள் கிராஷ் ஆனது அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.