மாயமான மலேசிய விமானத்தில் லித்தியம் பேட்டரிகளால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்
மாயமான மலேசிய விமானத்தில் லித்தியம் பேட்டரிகளால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த லித்தியம் பேட்டரிகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 ரேடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு தெரிவித்தது. ஆனால் விமானத்தை மாதக் கணக்கில் தேடியும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர்கள் விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
பேட்டரிகள் செல்போன்கள், லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை விமானத்தில் எடுத்துச் சென்றால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று விமான போக்குவரத்து நிபுணர் கிளைவ் இர்விங் தெரிவித்துள்ளார்.



