“விடியல் “சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் ஊடக செயலமர்வு- படங்கள்
(அமிர்தகழி நிருபர் )
“விடியல்” சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் மத்தியில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக ஊடக துறையில் கலாநிதி பட்டம்பெற்ற டாக்டர் . ரங்க கலன்சூரிய , சமூக வலய துறை சார் தொடர்பாடல் நிபுணர் . இஸ்மாயில் அசிஸ் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவு தொடர்பாடல் நிபுணர் பி .நிஹால் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இடம்பெற்ற செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் பிரநிநிதித்துவ படுத்தும் நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .
ஊடகவியலாளர்கள் ஊடக துறையினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் , அதன் போது ஊடவியலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் , சமூக வலய இணையதளத்தில் எவ்வாறான செய்திகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் போன்ற பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது .
“விடியல் “சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஒரு நாள் ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



