மட்டக்களப்பு மாவட்ட லியோ கழகம் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்.
மட்டக்களப்பு மாவட்ட லியோ கழகம் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் ,முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களின் தினத்தை முன்னிட்டு மாவட்ட லியோ கழக ஆளுனர் லயன் விக்கும்பிரிய வீரக்கொடி தலைமையில் கிழக்கு மாகாண லியோ கழக பொறுப்பாளர் லயன் டி . ஜசிகாவின் ஒழுங்கமைப்பில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றது . இதனை தொடர்ந்து சமூக சேவை நோக்கோடு லியோ கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவில் சிகிட்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் விசாரித்ததுடன் அவர்களுக்கான உணவு உண்பதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டான ஒசானம் நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர் . அங்குள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அவசிய பொருட்கள் வழங்கியதோடு அவர்களுடன் இணைந்து மதிய உணவினை உட்கொண்டனர் .
இந்நிகழ்வில் மாவட்ட இரண்டாவது ஆளுனர் அசேல கருணா வர்த்தன கழக மாவட்ட பொருளாளர் புத்திக்க வீரசேகர மற்றும் கழக அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)









