மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிறிஸ்தவ குருமார் ஒன்றியத்தின் கவனயீர்ப்பு போராட்டம்.
மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிறிஸ்தவ குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் உரிமையையும் அவர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தி அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் .
மாணவி வித்தியா மற்றும் சிறுமி சேயா ஆகிய இருவரில் படுகொலைகள் கண்டிக்கத்தக்கது , இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம் பெராதவண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை கோரளைப்பற்று தெற்கு கிறிஸ்தவ குருமார் ஒன்றியத்தினால் முறைக் கொட்டாசேனை இருந்து பிரதான வீதி ஊடாக கிரான் ஆஸிரமம் வரை அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் .
இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் முறைக் கொட்டாசேனை .எ .ஒ .ஜி . திருச்சபை மக்களும் ஊழியர்களும் , புனித பவுல் ஆலய மக்களும் குருக்களும் ,சிறுமந்தை ஆலய சபை மக்களும் ஊழியர்களும் , கிரான் மெதடிஸ்த திருச்சபை மக்களும் குருவானவர்களும் , கிறிஸ்தவ அறுவடை சபை ஊழியர்களும் சபை மக்களும் , வேதாகமத் திருச்சபை மக்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர் .
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)






