கொலம்பஸ் தலையில் கோடாரி வெட்டு... அமெரிக்காவில் சிலை அவமதிப்பு!
கார்கள் உற்பத்தியில் உலகத் தலைநகரமான டெட்ராய்ட் நகரில். கொலம்பஸ் சிலையின் நெத்தியில் கோடாரியால் வெட்டி ரத்தம் வழிவது போல் செய்து அவமதிப்பு செய்துள்ளனர். அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, வங்கிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அமெரிககாவை கண்டுபிடித்ததற்காக கொலம்பஸுக்கு மரியாதை செய்யும் விதமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு தெரிவிக்கும் பழங்குடியினர் அமெரிக்க இந்தியர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும், அமெரிக்கப் பழங்குடி இன மக்கள் பல ஆண்டுகளாக கொலம்பஸ் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொலம்பஸ் ஒரு கொலைகாரன், கற்பழிப்பு குற்றவாளி, மனித அடிமைகள் வியாபாரி. அவர் ஒன்றும் அமெரிக்காவை கண்டுபிடிக்க வில்லை. நாங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் இனம். அவர் ஒன்றும் புதிய தேசம் கண்டுபிடிக்க வரவில்லை. வணிக நோக்கத்துடன் வந்த வியாபாரிதான். அவர் இங்கு வந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இன்டிஜீனஸ் மக்கள் தினம் (Indigenous People Day) கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.



