Breaking News

மன அழுத்தமா... ஓடிப் போய் பாத்திரம் கழுவுங்க... காணாமப் போய்டும்!

மன அழுத்தமா... ஓடிப் போய் பாத்திரம் கழுவுங்க... காணாமப் போய்டும்!

சமையலையில் உள்ள அழுக்குப் பாத்திரங்களை முழு கவனத்தோடு கழுவினால் மன அழுத்தம் குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகின்றது. விதவிதமாக சமைத்து, மற்றவர்கள் வயிறார பசியமர்த்தும் போது வரும் நிம்மதி, விருந்திற்குப் பின் சமையறையில் அடுக்கிக் கிடக்கும் அழுக்குப் பாத்திரங்களைப் பார்த்தால் பெண்களுக்குக் காணாமல் போய் விடும். அதனால் தான் மார்க்கெட்டில் விதவிதமான சமையல் பாத்திரங்களைக் கழுவும் திரவங்கள், சோப்புகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பாத்திரங்களை கழுவினால், பாத்திரங்கள் புதியது போல் பளபளப்பாக மாறும், கையும் பட்டுப்போல் இருக்கும் என விளம்பரங்களில் கூறப்படுகிறது. ஆனால் நிஜத்தில் கை வலித்து, அதற்கான மருந்துகளைத் தேடும் நிலையில்தான் பெண்கள் உள்ளனர்.

எளிய வழி... ஆனால், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு மன அழுத்தத்தைக் குணமாக்குவதை விட எளிய வழி ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அது வேறொன்றுமில்லை அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களை அள்ளிப் போட்டு துலக்குவதுதான்.