"தேங்க்ஸ் வேதாளம்".. ஸ்ருதி ஹாசன்!
"தேங்க்ஸ் வேதாளம்".. ஸ்ருதி ஹாசன்!
வேதாளம் படத்தில் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது இந்த சந்தோஷத்தை அளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றிகள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக சென்னை, கொல்கத்தா இத்தாலி ஆகிய இடங்களில் நடந்து வந்த வேதாளம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது
இதனையொட்டி நடிகை ஸ்ருதிஹாசன் "வேதாளம் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மிகவும் ஜாலியாகவும் நல்ல அனுபவமாகவும் இருந்ததது. குறிப்பாக எனது சூப்பரான இயக்குநர் சிவாவுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.