தேசிய ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
தேசிய ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எஸ் . சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .
மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர்களை கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் எம் .சார்ள்ஸ் கலந்துகொண்டார் .
இந்நிகழ்வின் போது மாவட்ட ஓய்வூதியர்களினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட பாடல்கள் , உரையாடல்கள் மற்றும் கவிதைகள் போன்ற நகைச்சுவையான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மண்முன வடக்கு பிரதேச செயலாளர் .வி. தவராசா , மண்முனை பற்று பிரதேச செயலாளர் .வி வாசுதேவன் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம் . கோபாலரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் . நேசராசா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)