Breaking News

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தாழங்குடா முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கான வாழ்வாதார நிதி உதவி வழங்கும் நிகழ்வு

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு   தாழங்குடா  முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில்  முதியோர்களுக்கான வாழ்வாதார நிதி உதவி வழங்கும் நிகழ்வு தாழங்குடா சமுர்த்தி மகா சங்க மண்டபத்தில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  தாழங்குடா முதியோர் சங்க ஏற்பாட்டில்  வண பிதா  எமில் ஹொப்பனோ வீடமைப்பு அபிவிருத்தி கடனுதவிக் கழகத்தின் அனுசரணையில் முதியோர் சங்க தலைவர் வி .மகாலிங்கம் தலைமையில் முதியோர்களுக்கான வாழ்வாதார நிதி உதவி வழங்கும் நிகழ்வு தாழங்குடா சமுர்த்தி மகா சங்க மண்டபத்தில்  05.100.2015 பிற்பகல்  03.00 மணியளவில் இடம்பெற்றது .  

 தாழங்குடா  முதியோர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டுள்ள  உறுப்பினர்களின்  முதியோர் தினத்தை நினைவு கூறும் முகமாகவும் அவர்களின்  வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடனும்  வருடந்தோறும் நடத்தப்படும் முதியோர் தின நிகழ்வில் அவர்களுக்கான உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது .

இதன் ஒரு நிகழ்வாக  இன்று இவர்களுக்கான உதவி தொகை  வண பிதா  எமில் ஹொப்பனோ வீடமைப்பு அபிவிருத்தி கடனுதவிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  அதிதிகளாக  மண்முனை பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் பி .கலாதரன் , தாழங்குடா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  வ .வள்ளிபுரம், தாழங்குடா வேடர் குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் என் . கிரிஷாந்த நாதன் , மண்முனை  தாளங்குடா.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)