காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்
காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்
இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார். திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்ட சிம்ரன் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தன்னைத் தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். அவர் கடைசியாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரின் ஆசையை அவரது கணவர் தீபக் நிறைவேற்றி வைக்க உள்ளார்.