Breaking News

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொடர்ந்து நாங்காவது நாளாகவும் உண்ணாவிரதம்- படங்கள்


( அமிர்தகழி நிருபர் )

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொடர்ந்து நாங்காவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள  13 தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க   மட்டக்களப்பு மாவட்ட  சர்வமத தலவைர்கள் இன்று காலை  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர் .

இங்கு  உண்ணாவிரதத்தை  மேற்கொண்டுள்ள அரசியல்  கைதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதன்  பின் கைதிகளின் நிலைப்பாடு    தொடர்பாக ஊடகங்களுக்கும் தமது கருத்தினை தெரிவித்துக்கொண்டனர்  .

இவர்களுடன் சிறைச்சாலைக்கு வருகை தந்த   மட்டக்களப்பு மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை  எ . தேவதாசன்   கூறுகையில் நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கும்  அரசியல் கைதிகளை  சந்தித்த வேளையில் அவர்களுக்கு ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியதாகவும் தெரிவித்துக்கொண்டார் . 

மேலும் அவர் கூறுகையில்  இவர்களுடைய நம்பிக்கைகாகவும் தாங்கள் பிராத்தனை செய்து , இவர்களது விடுதலைக்காகவும்   இவர்களின் குடும்பங்களை சந்தித்து எங்களால் முடிந்த அளவுக்கு  அந்த குடும்ப உறவுகளுக்கு உதவிகளை செய்து  அந்த குடும்பங்களின் ஆறுதலுக்காக எல்லா மதத்தை சார்ந்தவர்களும் ஒரு மனத்தோடு செயல்பட போகின்றோம்   அதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம் .

அதேவேளை மனிதாமிமான  உணர்வு  ஒன்று இருக்கின்றது  எமது கோதரர்கள் கஷ்டப்படும்போது அவர்களை பார்க்கும் போது கூட அவர்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கின்றது . அந்த ரீதியில் நாங்கள் அனைவரும் வந்தாகவும் தெரிவித்துக்கொண்டார் .


இவர்களுக்காக உலக ரீதியில் பல குரல்கள் எழுப்பபடுகின்ற வேளையில்   எமது அரசாங்கமும் இவர்கள் மேல் கவணம் செலுத்தி இவர்களுடைய விடுதலைக்காக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக தாம் பிராத்தனை செய்வதாக