காசு கொடுத்து மாணவரிடம் "கசமுசா" செய்த இந்திய ஆசிரியர்... அமெரிக்காவில் கைது
காசு கொடுத்து மாணவரிடம் "கசமுசா" செய்த இந்திய ஆசிரியர்... அமெரிக்காவில் கைது
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 16 முதல் 18க்குள் வயது இருக்கும் என்பதால் அந்த ஆசிரியர் மீது மைனரிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும் காசு கொடுத்து உறவு வைத்துக் கொண்ட பிரிவில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இன்டியானா மாகாணத்தில் உள்ல பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் 24 வயதான மிஹிர்பாய் படேல். இந்தியரான இவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் ஆன்லைனில் ஒரு மாணவனிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து சாட் செய்து நெருங்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவனை உறவுக்கு அழைத்துள்ளார் ஆசிரியர். முதலில் இருவரும் ஒரு மோட்டலில் வைத்து சந்தித்து தகாத உறவில் ஈடுபட்டனர். இதற்காக அந்த மாணவனுக்கு 150 டாலர் பணம் கொடுத்துள்ளார் ஆசிரியர். அடுத்து தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போய் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது 200 டாலர் பணம் கொடுத்துள்ளார். தற்போது, விபச்சாரத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



