இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள்..
இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள்..
இந்திய கேப்டன் பதவியில் இருந்து டோணி நீக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அடுத்தடுத்த தொடர் தோல்விகள் மட்டுமின்றி, அணியின் வீரராகவும் சிறப்பான பங்களிப்பை அளிக்க டோணி தவறி வருவதால் டோணி மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.
டி20 தொடர்
டி20 தொடர் முதலில் நடைபெற்ற டி20 போட்டித்தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. அடுத்தடுத்து முதல் இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரி்க்கா வென்ற நிலையில், கொல்கத்தாவில் நடைபெற இருந்த, மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.



