Breaking News

சர்வதேச சிறுவர் மற்றும் பெண்பிள்ளைகள் தினமும் முதியோர் வார நிகழ்வு‏களும் மட்டக்களப்பில்.

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு மற்றும் சமூக சேவைகள் கிளை ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் பெண்பிள்ளைகள் தினமும் முதியோர் வாரமும் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக தவிசாளர் பொன் செல்வநாயகம், மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இடம்பெற்ற சர்வதேச சிறுவர் மற்றும் பெண்பிள்ளைகள் தினமும் முதியோர் வார நிகழ்வின் போது தேன் சிட்டு  மலர் -03   என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும்  மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட  மாவட்ட அரசாங்க அதிபர்  இங்கு உரை ஆற்றுகையில்  சர்வதேச ரீதியிளும்  நமது  நாட்டிலும்   பெண்கள் ,சிறுவர், முதியோர் மற்றும் மகளிர் தினம் என பல தினங்களை நாம் கொண்டாடிவருகின்றோம்.

அதிலும்  சிறப்பாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்  பிரிவுகளிலும் அதே போன்று மாவட்ட செயலகத்தினாலும்  பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட  போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளி விபர அடிப்படையில் பார்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகளும் , சமூக குற்றச்செயல்களும் அதிகரித்து காணப்படுவதாக   பல அறிக்கைகள் , பல முறைப்பாடுகள் , பல சம்பவங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடப்படுவதாக சுற்றி காட்டினார்.

மேலும் அவர் இங்கு பேசுகையில் மிக முக்கியமாக சிறுவர்களும் பெண்களும் இந்த சமூகத்தில் பல சவால்களுக்கு முகம் வருகின்றனர்.

மட்டக்களப்பில்  மட்டுமல்ல இலங்கையின் பல பாகங்களிலும் நடந்தேறி கொண்டிருகின்ற குற்றச்செயல்கள் இதனை விட வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளி ,கருத்து முரண்பாடுகள் , பாடசாலைகளில் அவர்கள் எதிர் நோக்கின்ற சவால்கள் அவர்களின் மனங்களில் காணபடுகின்ற மண அழுத்தங்கள்  அவர்களுக்கும் சமூகத்துக்கும்  இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றது.

அந்த வகையில்  மட்டக்களப்பு செயலகத்திலும் ,பிரதேச செயலகத்திலும் சிறுவர், பெண்கள் மற்றும் முதியோர்களை பராமரிப்பதற்காக பல்வேறு திணைக்களங்கள்  அந்த திணைக்களங்களுக்கு பல அதிகாரிகள், இது சம்பந்தமாக பல நிருவாக கட்டமைப்புகள், அந்த அதிகாரிகளுக்கு பல பயிற்சி நெறிகள் , அவர்களுக்கான பல உக்குவிப்புகள்  வழங்கப்படுகின்றன.

இதேபோன்று தேசிய ரீதியாக இதன் கீழ் பல பணியகங்கள் , இதற்கான அதிகாரிகள் , இதற்காக அரச சார்பற்ற  நிறுவனங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இந்த நாடு முழுவதும் முன்னெடுக்க பட்டாலும் எமது சமூகம் எதிர் நோக்கின்ற இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் மிக தெளிவாக இல்லை என்பது எல்லோராலும் கூறப்படுகின்ற கருத்தாக இங்கு அவர் தெரிவித்தார்.

மேலும் இங்கு தமது கருத்தை தெரிவிக்கையில் இலங்கையில் கடந்த  30 வருட கால  யுத்தம் , இடம் பெயர்வுகள் எமது சமூக கட்டமைப்புக்களை சிதைத்து விட்டது.

இந்த சமூக கட்டமைப்புகள் சிதைந்து போனதால் எமக்குள் பரிமாறப்படவேண்டிய பெறுமதிகள்   எமது பண்புகள் , எமது பாரம்பரியங்கள் , கலாச்சாரங்கள்  அற்று போய்விட்டதாக தெரிவித்தார்.

உலகத்திற்கே செல்லி கொடுக்கின்ற சமுதாயமாக மிளிர்ந்த  இந்த சமுதாயம் இன்று சீர்குலைந்து போய்விட்டது என்றால் அதனை சீர் அமைக்க வேண்டியது இங்கு இருகின்ற ஒவ்வொரு குடிமகனுடையதும், ஒவ்வொரு தாயுடையதும் , ஒவ்வொரு தந்தையுடையதும் கடமையாகும்.

இதனை அரச நிருவாகமோ , அரசாங்க அதிபர் செயலகமோ அல்லது பிரதேச செயலகமோ செய்ய வேண்டியதை இங்கு மார்தட்டி கூறுவதை விட , இதனை  இந்த சமூகம் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பாகும்.

அதுவே உண்மையானது அதனை விடுத்து பத்திரிகையிலும் , சமூக வலையத்தலங்களிலும் வருவதை விட சமூகத்தின் மத்தியில் ஏற்படுகின்ற  மாற்றத்தின் ஊடாகவே   இந்த  மாற்றத்தை உருவாக்க முடியும் ,அதனையே இந்த சமூகம் எதிர் பார்கின்றது  என தெரிவித்துக்கொண்டார்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)