இரட்டை வாக்கு முறையை அமுல்படுத்தகோரி தேசிய ஷூறா சபையானது அரசிடம் வேண்டுகோள்
தேசிய ஷூறா சபையானது தேசிய அளவில் இயங்கும் முன்னணி முஸ்லிம் நிறுவனங்கள், கல்வியாளர்கள், தொழின்மையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டிணைப்பாகும்.
நமது நாட்டின் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது தலைமையில்முன்னெடுக்கப்பட்டு வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தேசிய ஷூறா சபை வரவேற்கிறது.
குறிப்பாக விருப்பு வாக்குமுறையை மாற்றியமைத்தல், தேர்தல் தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர்பிரதிநிதித்துவப்படுத்தும் முறையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருதல் ஆகியன பொருத்தமானமுன்னெடுப்புகளே என தேசிய ஷூறா சபை கருதுகிறது.
நாடாளுமன்றமானது மக்கள் பிரதிநிதிகள் சபையாகவே அறியப்பட்டு வருகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக தமிழ், மலாய், பறங்கிய சமூகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரது பிரதிநிதிகளும் உள்ளடங்கியதாகஅது அமைதல் வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தினதும் இனக்குழுவினதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது அந்தந்ததரப்பினரது, தேசிய விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அமைதல் வேண்டும் என தேசிய ஷூறா சபைவலியுறுத்துகிறது.
புதிய தேர்தல் முறை இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும். எமக்குக் கிடைக்கின்றஊடக தகவல்களின் பிரகாரம்இ கடந்த 08-06-2015 இல் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 2௦ ஆவது திருத்தச்சட்ட வரைபு இதனைக் கருத்தில் கொண்டதாக அமையவில்லை.
இலங்கை ஒரு பன்மைத்துவப் பண்பு கொண்ட நாடு. இங்கு பலதரப்பட்ட சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர்.இவர்கள் பரவலாக சிதறியும்இ சில இடங்களில் செறிவாகவும் வாழ்கின்றனர்.
தற்போதைய முன்மொழிவு தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் தேர்தல் தொகுதிகளை அல்லது தொகுதிகளின் சில பாகங்களை இணைத்துஇ தொகுதிகளை புதிதாக எல்லை நிர்ணயம் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இது கடினமான, நீண்ட காலம்எடுக்கும் செயன்முறையாய் அமையும்.
இதன் மூலம் சமூகங்களிடையே புரிந்துணர்வின்மை, துருவமயமாதல் போன்ற எதிர் விளைவுகள் அதிகரிக்கவாய்ப்புள்ளது. போருக்குப் பிந்திய இலங்கையில் புரிந்துனர்வின்மைக்குப் பதிலாக, மீளிணக்கமும் சமாதானசகவாழ்வும் அதிகம் வலியுறுத்தப்பட வேண்டும். அவை நடைமுறைச் சாத்தியங்களாக, யதார்த்தங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எனினும், இந்த தேர்தல் முறை ஊடாக அவ்வாறான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சூழ்நிலை தோன்றிவிடக்கூடாது என தேசிய ஷூறா சபை வேண்டிக் கொள்கிறது. நாட்டின் எதிர்கால நன்மை கருதியே அது இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
புதிய திருத்தங்கள் ஏற்படுமாயின், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50% இனால் குறைவடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுபோலவே சிறுபான்மை சமூகங்களினதும் இனங்களினதும் பிரதிநிதித்துவம்குறைவடையலாம். இதனால் சிறிய கட்சிகளும் பாதிப்படையும். இது ஜனநாயகப் பண்பைப்பலவீனப்படுத்துவதாய் அமையும்.
இந்த இக்கட்டான நிலையை ஓரளவு சீர் செய்ய, நாடாளுமன்றத் தேர்தலில் வேறு சில நாடுகளில் உள்ளதுபோன்ற இரட்டை வாக்கு முறையை அமுல்படுத்துவது குறித்து கூடுதல் கவனத்தைச் செலுத்துமாறு தேசியஷூறா சபை அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.
அனைத்து வகையான வெட்டுப் புள்ளி முறையையும் நீக்கி விடுமாறு தேசிய ஷூறா சபை அரசாங்கத்தைவேண்டிக் கொள்கிறது.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவில்இ நாட்டிலுள்ள அனைத்து இனங்களதும் சமூகங்களதும் பிரதிநிதிகள்உள்ளடக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரதும் அபிலாஷைகளும் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு, சகலருக்கும் நீதியும் நியாயமுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும் என தேசிய ஷூறா சபைவலியுறுத்துகிறது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் தேசிய ஷூறா சபையினர்
ஜே.தாரிக் மஹ்மூத் – தலைவர்
டீ.கே. அஸூர் – பிரதித் தலைவர்
அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் – உதவி பொதுச் செயலாளர்
எம்.எச்.எம்.ஹசன் – நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்



