Breaking News

தங்களது மதத்தை அறிந்து கொள்வதை போல பிற மதத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் மதத்தின் பெயரால் எற்படக்கூடிய மோதல்கள் தவிர்க்கலாம் - எஸ். அய்யூப்.

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில்  02.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடியிலுள்ள தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது.

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப், தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் றவூப், நிருவாக உறுப்பினர் இர்பான் உட்பட அச்சு, இலத்தரனியல், இணையதள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் கருத்து தெரிவிக்கையில்,

தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சார்பாக கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு அதிகமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகள், பல நலப்பணிகள் மிக சிறப்புடன் நடாத்தி வருவதாகவும் அதிகமான இளைஞர்களை தன் வசம் கொண்ட மேற்படி அமைப்பின் மூலமாக பல்வேறு சமூகப்பணிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வரிசையில் எதிர்வரும் 02ம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை சுமார் பத்தாயிரம் நபர்கள் கலந்து கொள்வார்கள் என்கின்ற ஒரு பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு வசதிகளோடு மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஒரு அரசியல் பலத்தை காண்பிப்பதற்கான மாநாடாகவோ, பெரும்பான்மை மக்களை தன்வசப்படுத்தி உலக விசயங்களை சாதிக்கின்ற மாகாநாடாகவோ இம் மாநாடு இல்லையெனவும், பொதுவாகவே இந்த உலகத்தில் வாழுகின்ற குறிப்பாக இலங்கை நாட்டில் வாழுகின்ற பல மதங்களை சார்ந்த மக்கள் அவரவர் தங்களது மதத்தை அறிந்து கொள்வதை போல, பிற மதத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் இனவாதங்கள், பயங்கரவாதங்கள், தீவிரவாதங்கள், மதத்தின் பெயரால் ஏற்படக்கூடிய மோதல்கள் போன்ற இவைகள் விளகி ஜாதி, மதம் இல்லாத ஒரு சகோதரத்துவம் ஏற்படும், அப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் மகாநாட்டின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடரப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இஸ்லாம் இந்த உலகத்திற்கு மனித சமுதாயத்திற்கு வழங்கிய வேதமாகிய திருக் குர்ஆனை பிற மதத்தவர்களும் படிக்க வேண்டும். அந்த வேதத்தை பின்பற்றுகின்ற முஸ்லிம்களும் படித்து அதன்படி நடக்க வேண்டும் என்று குர்ஆனின்படி மக்களை வாழத் தூண்டுகின்ற ஒரு மாநாடுதான் இந் மாநாடு. அவரவர் அவர்களுடைய மதத்தை பார்த்து சரியாக புரிந்து நடந்திட்டாலே பல பிரச்சினைகள் இந்த மனித சமுதாயத்தில் விலகி ஒரு சாந்தி சமாதானமான வாழ்வு உண்டாகும் என தெரிவித்தார்;.

திருக்குர்ஆனின்படி குறிப்பாக மனித சமுதாயத்தில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தை திருக்குர்ஆனின்படி வாழவைக்க வேண்டும் என்பதற்காக நடாத்தப்படுகின்ற இம் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்கள் மூவர் உரையாற்றவுள்ளனர்.

இதில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்களான கோவை எஸ். அய்யூப் மனித குலத்திற்கு மாமறையின் அறைகூவல் எனும் தலைப்பிலும், ஏ.அன்சார் ஹுசைன் (ஃபிர்தௌசி) மாமனிதரின் மனித நேய குரல் எனும் தலைப்பிலும், எஸ்.ஹாமீம் (ஃபிர்தௌசி) இஸ்லாமிய இனிய பண்புகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளி இடங்களில் இருந்து வரும் சகோதர, சகோதரிகளுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மிகக் குறிப்பாக இந்த மாநாட்டில் ஒரு பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு வெறுமெனே உரைகள் நிகழ்த்தி இரவு உணவு ஏற்பாடு செய்து கலைந்து போகின்ற ஒரு நிகழ்ச்சி அல்ல என்பதை உங்களின் மேலான கவனத்திற்கு சொல்லுவதோடு, இலங்கை அரசுக்கு, இலங்கையில் வாழுகின்ற மக்களுக்கு ஒரு 15 தீர்மாணங்கள் இந்த மாநாட்டில் போடப்படவுள்ளது.

இந்த தீர்மாணத்தில் குறிப்பாக சமூக கொடுமைகளை கண்டித்து வட்டி, மது, சூது, பயங்கரவாதம், தீவிரவாதம், ஜாதியின் பெயரால் நடாத்தப்படுகின்ற இனவாதம் அனைத்தையும் கண்டித்து போடப்படுகின்ற தீர்மாணங்கள் உண்டு.

வரதட்சனை இந்த மனித சமுதாயத்தில் மிகப் பெரிய கொடுமையாகவும் பெண் இனத்திற்கு இழைக்கப்படுகின்ற ஒரு கொடுமையாகவும் நிகழ்கின்றது.

எல்லா தீமைகளையும் எதிர்ப்பதில் முன்னணியாக இருக்கின்ற இஸ்லாம்,  வரதட்சனையை மிகவும் கடுமையாக கண்டிக்கிறது. அந்த வரிசையில் வரதட்சனைக்கு எதிராக நான்கு தீர்மாணங்கள் போடப்பட்டுள்ளது.

ஒரு தீர்மாணம் வருகின்ற இளைய தலைமுறையை சார்ந்த பெண்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் முடிக்க வேண்டும். இரண்டாவது தீர்மாணம் பெற்றோர்கள் வரதட்சனை வாங்காத மனமக்களை, மனமகளை தேர்வு செய்ய வேண்டும் மூன்றாவது வரதட்சனை வாங்கி நடாத்தப்படுகின்ற திருமணங்களை சமூக அமைப்பில் உள்ளவர்கள், ஜமாஅத்தின் மதகுருமார்கள், ஜமாஅத்தார்கள் அப்படிப்பட்ட திருமணங்களை நடாத்தக்கூடாது, அந்த திருமணங்களை புறக்கணிக்க வேண்டும், வரதட்சனை வாங்கி திருமணம் செய்த சகோதரர்கள் அந்த வரதட்சனையை தாமதம் இல்லாமல் திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற சீதனத்திற்கு எதிரான, வரதட்சனைக்கு எதிராக, சமூக கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு தீர்மாணங்கள் போடப்பட்டுள்ளதாகவும் நம்மைப் படைத்த இறைவனை முழுமையாக ஒவ்வொறு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற கடவுல் கோட்பட்டை வழியுறுத்துகின்ற பல்வேறு தீர்மாணங்கள் உள்ளடக்கி பதினைந்து தீர்மாணங்கள் இலங்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலந்து கொண்ட பொது மக்களின் சார்பாக போடப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் விஷேட அம்சமாக ஏழை மக்களின் துயரம் துடைக்க தையல் இயந்திரம், ஊனமுற்றோர்களுக்கான சக்கர நாட்காலி வழங்குதல், ஏழை மக்களின் குடியிருப்புக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தல் போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நியூவற்றி‬ நிருபர் பழுலுல்லாஹ் பர்ஹான்)