தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகும் ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம்.
அரச ஊழியர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கொடுப்பனவு, செப்டம்பர் மாதத்தின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்று வாக்ககுறுதி அளித்திருந்த போதிலும், அது இதுவரையில் வழங்கப்பட வில்லை என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் சம்பத் ராஜித இது தொடர்பில் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயமாக தொடர்பாக தற்போது ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.