Breaking News

அமெரிக்க அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசின் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் - இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க அரசின் திருத்த வரைபு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசின் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் வழியையே தாம்மும் பின்பற்றுவதாக தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தமிழ் மக்களை ஒரு போதும் கைவிட போவதில்லை என்று குறிப்பிட்டார்.