மின்னல் தாக்கத்தினால் மீனவர்கள் இருவர் மரணம்
மின்னல் தாக்கத்தினால் மட்டக்களப்பில் மீனவர்கள் இருவர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளி திகிலிவெட்டைப் பகுதியில், மின்னல் தாக்கிய நிலையில், இரண்டு மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (18), திகிலிவெட்டைக் களப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை கிருஷ்ணரூபன் (வயது 27), இளையதம்பி புலேந்திரன் (வயது 37) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



