செவ்வாய் கிரகத்தை அணு குண்டு வீசி சூடுபடுத்தத் திட்டம்?..
செவ்வாய் கிரகத்தை அணு குண்டு வீசி சூடுபடுத்தத் திட்டம்?..
செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் அணுகுண்டை வீசி அங்கு செயற்கையாக வெப்பத்தை உருவாக்க மகா கோடீஸ்வரர் எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். மாறாக, செவ்வாய் கிரகத்திற்கு மேலே செயற்கையாக சில சூரியன்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வெப்பத்தை கொண்டு வரலாம் என்று அவர் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தை சூடுபடுத்த வான் வெளியிலேயே வெப்பத்தை உருவாக்குவதே தனது திட்டம் என்றும் மஸ்க் கூறியுள்ளார். மாறாக அணு குண்டு வீசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.