கேன்சருக்கு புதிய சிகிச்சை அளிக்க உதவியதற்காக 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
கேன்சருக்கு புதிய சிகிச்சை அளிக்க உதவியதற்காக 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
வேதியியல் துறைக்கான இந்தாண்டிற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு கூட்டாக அளிக்கப்படுகிறது. உயிருள்ள ஒரு செல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்ததன் மூலம் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள் அளிக்க உதவியதற்காக இவர்களுக்கு இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடன் விஞ்ஞானி டோமஸ் லிண்டால், அமெரிக்க விஞ்ஞானி பால் மாட்ரிச், துருக்கி அமெரிக்க விஞ்ஞானி அஜிஸ் சாங்கர் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படும் என நோபல் பரிசு குழு நேற்று அறிவித்துள்ளது.



