மழைநீரை அப்படியே ‘குடிக்கும்’ பிளாஸ்டிக் சாலைகள்... நிலத்தடி நீரை அதிகரிக்கும்!
மழைநீரை அப்படியே ‘குடிக்கும்’ பிளாஸ்டிக் சாலைகள்... நிலத்தடி நீரை அதிகரிக்கும்!
மழை நீரை முழுவதும் உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான புதிய பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலைகளை அமைத்துள்ளது நெதர்லாந்து நிறுவனம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகளில் எண்ணிலடங்கா நுண்ணிய துளைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சாலையில் நீர் தேங்காமல், அனைத்தும் விரைவாக பூமிக்கடியில் சென்று விடும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள்... இந்த சாலையில் ஒரே நேரத்தில் சுமார் 4000 லிட்டர் தண்ணீரை ஊற்றி சோதனை செய்யப்பட்டது. 4000 லிட்டர் தண்ணீரும், நீர் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஒரு நிமிடத்தில் நிலத்திற்கு அடியில் சென்று விட்டது.