மூன்று முகம் கிடைக்கவில்லை விஜய் அட்லீ படத்தின் தலைப்பு 'காக்கி' ?
நடிகர் விஜய் - அட்லீ இணையும் புதிய படத்தின் தலைப்பு ஒருவழியாக முடிவாகிவிட்டது. இந்தப் படத்துக்கு காக்கி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். ராதிகா சரத்குமார், இயக்குநர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார். அதனால், ரஜினி, போலீஸ் அதிகாரி, ரவுடி உள்ளிட்ட மூன்று கெட்டப்புகளில் நடித்து அசத்திய ‘மூன்று முகம்' படத்தின் தலைப்பை வைக்க முடிவு செய்து சத்யா மூவீஸை அணுகினர். ஆனால், அந்த தலைப்பை அவர்கள் வேறு படத்துக்கு பயன்படுத்தப் போவதாகக் கூறிவிட்டனர். எனவே, புதிதாக பல தலைப்புகளைப் பரிசீலித்தனர். கடைசியாக, ‘காக்கி' என்ற தலைப்பை முடிவு செய்துள்ளார்களாம். ‘காக்கி' என்ற பெயரில் ஏற்கெனவே சரத்குமார் நடிப்பில் ஒரு படம் உருவாகி பாதியிலேயே நின்றுவிட்டது. வேறு சிலரும் இந்தத் தலைப்புக்கு முயற்சித்து கைவிட்டுவிட்டனர்.



