Breaking News

கல்லடி விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு படங்கள் இணைப்பு.

மட்டக்களப்பு -  கல்லடி விவேகானந்த  மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு இன்று  காலை 10.30  மணியளவில் பாடசாலை நடராஜானந்தா மண்டபத்தில் அதிபர் டி . ஹரிதாஸ்  தலைமையில்  இடம்பெற்றது  .

கல்லடி   விவேகானந்த  மகளிர் மகா வித்தியாலய  மாணவர்கள் இந்த நிகழ்வினை ஏற்பாடு  செய்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில்  மாணவர்களினால் ஆசிரியர்களையும்  நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும்  ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்   ஆசிரியர்களின்   கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .

இதன் போது “குரு பிரதிபா” விருது பெற்ற பாடசாலை அதிபர் டி . ஹரிதாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது  .

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்குவதில் முன்னிலையில் இருக்கின்ற   ஆசிரியர்களையும் அதிபர்களையும்  கௌரவிக்கும் வகையில் மாணவர்களினால்  நடத்தப்படுகின்ற நிகழ்வாகும்.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய  கல்லடி உப்போடை இராமகிஷ்ணமிஷன் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ்,  விசேட அதிதியாக  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் ஆர் ஜெகநாதன் மற்றும்  ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ,அதிபர்கள்   பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  பாடசாலை ஆசிரியர்கள் ,   மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)