Breaking News

எட்டு நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 15வயது சிறுவனை காணவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பிரதேசத்திலுள்ள கடலில் குளிக்கச்சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எட்டு நண்பர்களுடன் இவர் இன்று காலை குறித்த கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார் எனவும் இவர்களுள் 7 பேர் தப்பிவந்துள்ள நிலையில் ஒருவரை நீர் இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரினால் இழுத்துச் செல்லப்பட்டவர் புதிய காத்தான்குடி-06 கர்பலா வீதியைச் சேர்ந்த  15 வயதுடைய அப்துல் அசீஸ் முஹம்மது சம்சாத் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-