அல் - பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா.
காத்தான்குடி 01 ஆம் குறிச்சியை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அல் - பஜ்ர் நலன்புரி அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் விழாவொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி பாராட்டு விழா அல் - பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எஸ்.ஏ.கே.பளீலுர்ரஹ்மான் தலைமையில் எதிர்வரும் 2015.11.06ஆந் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு குவைத் சிட்டியில் அமைந்துள்ள அல் - பஜ்ர் நலன்புரி அமைப்பின் தொழுகை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு கௌரவ அதிதிகளாக அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) அவர்களும் தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் முதல்வர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் (மதனி) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களும், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.கே.முஹம்மத் (ஜாபிர்) நளீமி அவர்களும் தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். அஸ்பர் ஹஸன் (பலாஹி) அவர்களும் பங்குபற்றவுள்ளனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 11 மாணவர்கள் பாராட்டப்படவுள்ளனர்.
அல் - பஜ்ர் நலன்புரி அமைப்பு பல்வேறு சமூப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ.அப்துல் நஸார்



