உயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழி பயிற்சி நெறி மட்டக்களப்பில்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் தேசிய ரீதியில் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி பயிற்சி வேலைத்திட்டம் தற்போது அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு அமைவாக தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி பயிற்சி திட்டம் நாடளாவியல் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட 60 மாணவர்களுக்கு சிங்கள மொழி தொடர்பான 12 நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நடைபெற்றது.
இப் பயிற்சியினை நிறைவு செய்து கொண்ட மாணவர்களுக்கான இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் க. கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இப்பயிற்சி நெறியின் வழங்கிய வளவாலர்கள், மாவட்ட செயலக தேசிய மொழி செயல்பாட்டு இணைப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய மொழி ஒருங்கமைப்பு மேம்பாட்டு உதவியாளர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


