வியக்க வைக்கும் “வேதாளம்” - 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி
அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த வேதாளம் திரைப்படம் 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கைப்பற்றியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வேதாளம் வெளியானது. தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
அஜித்தின் வேதாளம் 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிலும் இத்திரைப்படம் வசூலைக் குவித்து வருகின்றதாம்.



