மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமருடரான நேர்காணல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேட்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறை, காட்டு யானைகளின் அட்டகாசம், மின்வேலி அமைத்தல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அலுவலகங்களை பரவலாக்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது .



