Breaking News

நாட்டின் நல்லாட்சிக்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்த சோபித தேரர் அவர்கள் சோபித தேரர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்

இந்த நாட்டின் நல்லாட்சியை உருவாக்குவதில் தனது இறுதி மூச்சு வரை தன்னை அர்ப்பணித்தவர் சோபித தேரர் அவர்கள் என சோபித தேரரின் மறைவையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது. 

இந்த நாட்டின் நல்லாட்சியை உருவாக்குவதில் தனது இறுதி மூச்சு வரை தன்னை அர்ப்பணித்த சோபித தேரர் அவர்கள் இலங்கைத் திருநாட்டின் பல்சமய மக்களின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் அவர்களது இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறான முன்மாதிரிகளை அனைத்து சமயத்தலைவர்களும், சமயத்தவர்களும் கைக்கொள்ளவேண்டியது அவசியம் என்று ஜம்இய்யதுல் உலமா கருதுகின்றது. மறைந்த சோபித தேரரின் இழப்பில் ஆழ்ந்த கவலையையும், துக்கத்தையும் இலங்கை நாட்டு மக்களோடு பகிர்ந்து கொள்கிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஐ.அப்துல் நஸார்